கர்ப்பமான விஷயத்தை சொல்லும் தனத்தை திட்டிவிடும் மூர்த்தி – அனல்பறக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று மீனாவின் அப்பா ஜனார்த்தனன் தானம் குழந்தை மற்றும் மீனாவை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கெஞ்சியும் அவரகள் இருவரையும் அனுப்ப மறுக்கிறார். அதே போல் ஜீவா மீனாவை தொடர்பு கொள்ளும் போது மீனா கோவமாக பேசுகிறார்.

“கோவத்தில் மீனா”

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று மீனா தனது அப்பா வீட்டிற்கு போனதற்கு காரணம் தனத்தின் அலட்சியம் தான் என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் கூறுகின்றனர். இதனை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாத தனம் மீனாவை வீட்டிற்கு அழைத்து வர அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கே மீனா தனத்தின் மீது உச்சக்கட்ட கோவத்தில் இருக்கிறார். அவரை சரமாரியாக திட்டவும் செய்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல” மீனாவின் தாய் மற்றும் தந்தை இருவரும் அவருக்கு ஒத்து ஊதுகின்றனர். மீனாவின் அம்மா ‘மீனாவே அந்த வீட்டிற்கு வர வேண்டும் என்று நினைத்தாலும் நாங்கள் அவளை விடுவதாக இல்லை’ என்று கூறுகிறார்.

மீனாவின் அப்பாவோ அவளை ‘எக்காரணம் கொண்டும் நாங்கள் அவளை உங்களது வீட்டிற்கு அனுப்ப தயாராக இல்லை’ என்று திட்டவட்டமாக கூறுகிறார். குழந்தை பிறந்து 2 மாதங்கள் தானே ஆகின்றது, இன்னும் சில நாட்களை போகட்டும் என்று தெரிவித்து விடுகின்றனர். இதனால் செய்வதறியாது தனம் வீட்டை விட்டு வெளியே வந்து விடுகிறார்.

ஆவலில் தனம்:

இரவில் ஜீவா மீனாவிற்கு கால் செய்கிறார். முதலில் மீனா அழைப்புகளை ஏற்கவில்லை. பின், அட்டென்ட் செய்து அவரை சரமாரியாக திட்டுகிறார். ஜீவா பல முறை மன்னிப்பு கேட்டும் மீனா அதனை காதில் வாங்கிவதாகவே இல்லை. ஜீவா தான் அன்று இருந்த நிலையினை எடுத்து கூறுகிறார். ஆனாலும், மீனா தான் எதையும் கேட்க தயாராக இல்லை எனவும் உனக்கு உன் குடும்பம் தானே முக்கியம் என்று கூறி விடுகிறார்.

ஹேமாவின் பெயரை சொல்லி ஏமாற்றும் வெண்பா – திருமணம் நடைபெறுமா??

இரவில் மூர்த்தி வருவதற்காக தனம் காத்திருக்கிறார். அதே போல் தான் கர்ப்பமான விஷயத்தை அவரிடம் சொல்லவும் ஆவலாக இருக்கிறார். ஆனால், மூர்த்தி வீட்டிற்கு வந்ததும் தனம் ஏன் மீனா வீட்டிற்கு சென்றார் என்று கேட்கிறார்.

அதே போல் இந்த வீட்டில் உன் முடிவு தான் எல்லாமே என்றும் திட்டுகிறார். இதனால் தனம் மிகவும் சோர்வடைந்து விடுகிறார். தனம் எப்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல போகிறார். அதனை குடும்பத்தினர் எவ்வாறு எடுத்து கொள்வார்கள்?? என்று கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here