தன் அண்ணனின் நண்பன் உதவியால் வீடு எடுத்து தங்கும் கண்ணன் ஐஸ்வர்யா.. நிம்மதியடையும் குடும்பத்தினர்!!!

0

பல்வேறு எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  ஊரை விட்டு காலி செய்ய முடிவு செய்கிறார் ஐஸ்வர்யா. அதை ஏற்க மனம் இல்லாமல் தவிக்கிறார் கண்ணன். இந்நிலையில் தன் அண்ணன் மூர்த்தியின் நண்பர் மூலம் வீடு கிடைக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உடல் நலம் சரியில்லாத மூர்த்தியை பரிசோதித்த டாக்டர் அவருக்கு பிபி கூடுதலாக இருப்பதாகவும் வேற ஒன்றும் இல்லை என்றும் சொல்கிறார். இந்நிலையில் இன்றைய கதையில், இது குறித்து கவலைப்படும்  மூர்த்தி கதிரிடம், தனக்கு ஏதாவது ஒன்று நடந்தது என்றால் தனம் மற்றும் அம்மாவை பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். இதை கேட்டு அதிர்ந்த கதிர் மூர்த்தியிடம் சமாதானம் சொல்கிறார்.

அதன் பின்னர் கண்ணன் நண்பரிடம் கண்ணை பற்றி விசாரிக்கிறார் ஜீவா. மேலும் கண்ணனுக்கு உதவ பணத்தையும் அவரின் நண்பரிடம் தருகிறார். அதன் பின்னர் வீட்டுக்கு வரும் ஜீவா, மீனாவிடம் எங்கு சென்றதாக கேட்க கண்ணனுக்கு உதவி செய்யுமாறு அப்பாவிடம் கேட்க சென்றதாக கூறுகிறார் மீனா. இதனை கேட்டு சந்தோசப்படுகிறன்றனர் குடும்பத்தினர்.

இதை அடுத்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை சந்திக்கும் கண்ணனின் நண்பன் அவர்களுக்கு தங்க இடம் இல்லாததால் சென்னை அல்லது திருச்சி செல்கிறீர்களா?? என்று கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா, கண்ணனை பார்த்து எழில் இடம் உதவி கேட்கலாமா? என கேட்கிறார். அதை கேட்ட கண்ணன், இங்க அண்ணன் இருக்க எல்லாரையும் விட்டு எப்படி போறது என கேட்கிறார். இந்நிலையில் அங்கு ஒரு பெரியவர்  வருகிறார்.

அப்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா பற்றி விசாரிக்கும் பெரியவரிடம் நடந்ததை கூறுகிறார் கண்ணனின் நண்பன். அந்த தருணத்தில் தனக்கு ஒரு இடம் இருப்பதாகவும் அங்கு தங்கி கொள்கிறீர்களா? என அந்த பெரியவர் கேட்கிறார். அதற்கு முதலில் மறுக்கும் கண்ணன் அதன் பிறகு  ஐஸ்வர்யாவின் சமாதானத்தை  ஏற்று கொண்டு தங்க சம்மதிக்கிறார்.

அதன் பிறகு கண்ணனுக்காக மீனா செய்த செயலுக்கு அவரை கட்டி தழுவி நன்றி கூறுகிறார். இதையடுத்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா பெரியவர் சொன்ன வீட்டிற்கு செல்கின்றனர். இவ்வாறாக இந்த சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here