அடகு கடை முதலாளி மூலம் கண்ணனுக்கு உதவும் மூர்த்தி…!பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் இன்றைய கதையில், நகையை அடகு வைக்க வரும் கண்ணனுக்கு, அடகு கடை முதலாளி மூலம் மூர்த்தி உதவி செய்ய திட்டமிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன்னுடைய வீட்டின் கரண்ட் பில் கட்ட பணம் இல்லாமல் இருக்கும் கண்ணனுக்கு தன் கழுத்தில் இருக்கும் செயின் கழற்ற கொடுத்து அடகு வைத்து பணம் பெற்று வருமாறு ஐஸ்வர்யா கூறுகிறார். இந்நிலையில் இன்று, தனத்திடம் தனக்கு ஒரு கனவு வந்ததாக கூறுகிறார் கதிர். அதாவது அந்த கனவில் ஒரு ஆண் குழந்தை  வந்ததாகவும் கூறுகிறார். மேலும் கண்ணன் போகும் போது இப்படி ஒரு கனவு வந்ததாகவும் கூறுகிறார்.

இதை கேட்ட ஜீவா, கதிருக்கு இரட்டை குழந்தை பிறக்க போகிறது என கிண்டலாக கூறுகிறார். அதன் பின்னர் லட்சுமியை பார்க்க கதிர் மற்றும் முல்லை ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர்.

அங்கு லட்சுமி உடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது தனது அத்தையை பார்க்க தனம் மற்றும் மூர்த்தி வருகின்றனர். அதன் பின்னர் நால்வரும் லட்சுமியுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து கண்ணன் மற்றும் சதீஷ் இருவரும் இணைந்து நகையை அடகு வைக்க செல்கின்றனர். அங்கு இருப்பர்வர்கள் கண்ணன் மற்றும் சதீஷ்  சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் நகையை அடகு வைக்க ஒவ்வொரு கடையாக அலைந்து கொண்டிருக்கின்றனர் கண்ணன் மற்றும் சதீஷ்.

இந்நிலையில் ஒரு கடையில் நுழைந்து செயின் கொடுத்து எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கேட்கிறார். அப்பொழுது அந்த கடையின் உரிமையாளர் உன்ன எங்கயோ பாத்துருக்கேன் என்று கூறுகிறார். அதன் பின்னர் மாலை வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பேப்பர்  ஒன்றில் நகையின் விவரங்களை எழுதி கொடுத்து அனுப்புகிறார்.

அதன் பின்னர் வீட்டிற்கு வரும் கண்ணன் மற்றும் சதீஷ் நடந்ததை ஐஸ்வர்யாவிடம் கூறுகின்றனர். அப்பொழுது ஐஸ்வர்யா மிகுந்த கோபத்தில் எந்த நம்பிக்கையில் நகையை கொடுத்துவிட்டு இந்த பேப்பர வாங்கிட்டு வந்தீங்க என கடுமையாக சத்தம் போடுகிறார். மேலும் கண்ணனை கடுமையாக பேசுகிறார்.

அதற்கு கண்ணன் மறுபடியும் நகையை வாங்கி விட்டு வருகிறேன் என கூறுகிறார். இந்நிலையில் நகை அடகு கடை முதலாளி மூர்த்திக்கு போன் செய்து, கண்ணன் வந்ததையும் நடந்ததையும் கூறுகிறார்.

மேலும் என செய்யலாம் என கேட்கிறார். அதற்கு உங்களுக்கு தோணுவதை செய்யுமாறு கூறி போனை வைத்து விடுகிறார் மூர்த்தி. இருப்பினும் மனசு கேட்காமல் மீண்டும் அடகு கடை முதலாளிக்கு  போன் செய்து கண்ணனிடம் நகை எதுவும் வாங்காமல் கொஞ்சம் பணம் கொடுக்குமாறு கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here