கரண்ட் பில் கட்ட பணம் இல்லாமல் தவிக்கும் கண்ணன்…!செயின் கொடுத்து உதவும் ஐஸ்வர்யா!!!

0

விஜய் டிவியில் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் இன்று, கரண்ட் பில் கட்ட பணம் இல்லாமல் தவிக்கும் கண்ணனுக்கு தன்னுடைய கழுத்தில் இருக்கும் செயினை கழற்றி கொடுத்து உதவி செய்கிறார் ஐஸ்வர்யா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உடல்நலம் சரியில்லாத தன் அம்மாவை பார்க்க வரும் கண்ணனை அம்மாவை பார்க்க விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர் மூர்த்தி மற்றும் ஜீவா. மேலும் லட்சுமியும் கண்ணனை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என கூறுகிறார். லட்சுமி சொன்னதை கண்ணனிடம் சொல்கிறார் மீனா. அதைக்கேட்டு அதிர்ச்சியில் இருக்கிறார் கண்ணன். இந்நிலையில் இன்றைய கதையில், வீட்டிற்கு வரும் கண்ணன் தன் வீட்டில் மட்டும் கரண்ட் இல்லாமல் இருப்பதையும், கதவை பூட்டாமல் இருப்பதையும் பார்க்கிறார்.

அதன் பின்னர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஐஸ்வர்யா, அத்தை  எப்படி இருக்காங்க என கேட்க அதற்கு, கண்ணன் என்னை அம்மாவை பார்க்கவே விடல என வருத்தத்துடன் கூறுகிறார். அதன் பின்னர் ஏன் இருட்டுல இருக்க கரண்ட் இல்லையா? என கேட்க அதற்கு ஐஸ்வர்யா கரண்ட் பில் கட்டவில்லை என பக்கத்து வீட்டுல உள்ளவங்க சொன்னதாக கூறுகிறார்.

அதன் பிறகு கதிர் மற்றும் முல்லை, கண்ணன் மற்றும் லட்சுமி பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கரண்ட் பில் பற்றி வீடு கொடுத்தவரிடம் போன் செய்து கேட்கிறார் கண்ணன். அப்பொழுது அவர் கரண்ட் பில் கட்டாமல் விட்டுவிட்டேன் என கூறி கண்ணனை கட்ட சொல்கிறார். மேலும் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி  ஐஸ்வர்யாவிடம் வருத்தப்படுகிறார் கண்ணன்.

அதன் பின்னர் கதவை திறந்து வைத்தால் காற்று நன்றாக வரும் என கூறி கண்ணனை சமாதானம் செய்கிறார். இந்நிலையில் பசியில் தூக்கம்  இல்லாமல் தவிக்கிறார் முல்லை. இவர் நடந்து திரியும் சத்தம் கேட்டு கதிர் எழும்புகிறார்.

அதன் பின்னர் என்னாச்சு என கேட்ட பசிக்கிறது என முல்லை கூற, அவரை  அழைத்து சமையல் அறைக்கு சென்று அவருக்கு சாப்பாடு சமைத்து தருகிறார் கதிர். இருவரும் ஆம்லெட்டை  பேசிக்கொண்டே  சாப்பிடுகின்றனர். காலை பொழுது விடிகிறது.

இந்நிலையில் கண்ணன் கரண்ட் பில் கட்ட ஒவ்வொருவரிடமும் போன் செய்து பணம் கேட்கிறார். இதை பார்க்கும்  ஐஸ்வர்யா தன்னுடைய கழுத்தில் இருக்கும் செயினை கழற்றி கொடுத்து பணம் பெற்றுக் கொண்டு வருமாறு கூறி கண்ணனிடம் கொடுக்கிறார்.

இந்நிலையில் லக்ஷ்மியை பற்றி தனம் புலம்பி கொண்டிருக்கிறார். அப்பொழுது கதிர் மற்றும் ஜீவா லட்சுமி ஒன்றும் இல்லை என கூறி சமாதானம் செய்கின்றனர். இவ்வாறு லட்சுமியை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். இத்துடன் இன்றைய கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here