தன் அம்மா லட்சுமியை பார்க்க கெஞ்சி கதறும் கண்ணன்…!உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தும் மூர்த்தி, ஜீவா!!!

0

தமிழ் டிவி சேனல்கள் வரிசையில் டாப்பில் இருக்கும் விஜய் டிவியில் மிக சிறப்பான கதை அமைப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்று, லட்சுமியை பார்க்க வரும் கண்ணனை, அவரை பார்க்க விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர் மூர்த்தி மற்றும் ஜீவா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன் அம்மா லட்சுமியின் உடல்நிலை குறித்து கடையில் வேலை செய்யும் சரவணன் மூலம் அறியும் கண்ணன் பதற்றத்துடன் ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறார். அதை பார்க்கும் மூர்த்தி மற்றும் ஜீவா மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய கதையாக, அம்மாவுக்கு என்னாச்சு என்று பதற்றத்துடன் வரும் கண்ணன் அம்மாவுக்கு என்ன நடந்தது என மூர்த்தியிடம் கேட்க அதற்கு ஜீவா கோபத்துடன் லட்சுமி பற்றி கூறுகிறார்.

அதே கேட்ட  மூர்த்தி அவன் யார் அவன் கிட்ட எதுக்கு நம்ம அம்மா பத்தி சொல்கிறாய் என கேட்கிறார். அதன் பின்னர் அம்மாவை பார்க்க  ரூமுக்கு செல்ல நினைக்கும் கண்ணனை தடுத்து நிறுத்துகிறார் மூர்த்தி.

இருப்பினும் அம்மாவை பாக்கணும் தயவு செஞ்சு அண்ணனிடம் சொல்லுமாறு ஜீவாவிடம் கெஞ்சுகிறார் கண்ணன். அதற்கு ஜீவா அம்மாவுக்கு இப்படி ஆனதுக்கு காரணம் நீதான் என கூறி கிளம்ப சொல்கிறார். அதன் பின்னர் மூர்த்தி, நான் போனதுக்கு அப்புறம் இவன அம்மாவ பார்க்க விடக்கூடாது என ஜீவாவை எச்சரித்து விட்டு கிளம்புகிறார். அதன் பின்பு  கண்ணனிடம், அம்மா உயிர் உடன் இருக்கணுனா நீ கிளம்பு என கைகூப்பி சொல்கிறார் ஜீவா. இவை அனைத்தையும் மீனா பார்த்து கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு வீட்டிற்கு வரும் மூர்த்தியிடம், கதிர் கண்ணன் ஹாஸ்பிடலுக்கு வந்ததை பற்றி கேட்க, அதற்கு முல்லை மற்றும் தனம் அத்தையின் இந்த நிலைமைக்கு அவன் தான் காரணம் அதனால அவன உள்ளே விடக்கூடாது என கூறுகின்றனர். இதையடுத்து கண்ணன் இன்னும் வீட்டுக்கு போகாமல் ஹாஸ்பிடலேயே இருக்கிறான் என கதிர் மூர்த்தியிடம் கூறுகிறார். அதற்கு மூர்த்தி என்ன ஆனாலும் எண்ணானாலும்அவன உள்ளே விடக்கூடாது என கூறுகிறார்.

அதன் பின்னர் ஹாஸ்பிடலில், வீட்டிற்கு போகாமல் எப்படியாவது அம்மாவை பார்த்து விட வேண்டும் என கண்ணன் ஜீவாவிடம் கெஞ்சி கொண்டே இருக்கிறார். இதை அறிந்த மீனா, ஜீவாவிடம்  கண்ணனை அத்தையை  பார்க்க விடும்மாறு சொல்கிறார். அதற்கு ஜீவா மறுப்பு தெரிவிக்க, அத்தைக்கு கண்ணனை பார்க்கனும்னு ஆசை இருக்கலாம்ல என கூறுகிறார் மீனா. அதன் பின்னர் கண் விழிக்கும் ஜீவா லட்சுமிக்கு உணவு ஊட்டுகிறார்.

அந்த நேரத்தில் லட்சுமியிடம் மீனா, கண்ணன் உங்களை பார்க்க வந்திருப்பதாக கூறி, அவன உள்ளே வர சொல்லவா என கேட்கிறார். அதற்கு லட்சுமி, எனக்கே அவன பார்க்க பிடிக்கவில்லை, அவன பார்த்த இப்பவே என் உயிர் போயிரும் என்று கோபமாக கூறுகிறார்.

இந்நிலையில் சாப்பாடு தட்டை கழுவ வெளியே வரும் மீனாவிடம் அம்மாவை பார்க்க விடுமாறு கேட்க அதற்கு மீனா, நீ வந்து இருக்கேன்னு அத்தை கிட்ட சொன்னே அவங்களுக்கு உன்ன பார்க்க சுத்தமா பிடிக்கல எனவும், உன்ன பார்த்த பாவமா இருக்கு  நீ கிளம்பு என கூறுகிறார். இதை கேட்டு அதிர்ந்து போய் நிற்கிறார். இவ்வாறாக இன்றைய கதை முடிவு பெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here