பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் நடந்த விசேஷம் – கேக் கட் செய்து கொண்டாடிய பிரபலங்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா மற்றும் தனத்திற்கு ஒரே நாளில் பிறந்த நாள் வர ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் கட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் மூர்த்தி தனி ஆளாக இருந்து தம்பிகளை இந்த அளவிற்கு ஆளாக்கியுள்ளார். மேலும் தனமும் திருமணம் ஆன நாளில் இருந்து தற்போது குழந்தைகளாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார்.

தனம் கதாபாத்திரமும் அனைவர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஏனெனில் தம்பிகளுக்காக தனது சந்தோஷத்தையே தொலைத்து வாழ்கிறார். ஜீவா மற்றும் கதிரின் திருமணம் எதிர்பாராத விதமாக பல பிரச்சனைகளுடன் நடக்க வீடே ரணகளமானது.

மீனா வீட்டிற்கு வந்ததில் இருந்து தற்போது வரை பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மீனா என்ன தான் சண்டை இழுத்தாலும் வெளியில் குடும்பத்தை யாரிடமும் விட்டு கொடுத்து பேச மாட்டார். அது தான் மீனா கதாபாத்திரத்தின் முக்கியத்துவமே. மீனா கதாபாத்திரன் குடும்பத்தில் பொதுவாக இருக்க கூடிய ஒருவரின் இயல்பை வெளிப்படுத்தி இருக்கும்.

இந்நிலையில் தான் மீனா கதாபாத்திரம் அனைவர்க்கும் பிடித்து போனது. தற்போது மீனாவாக நடிக்கும் ஹேமா மற்றும் தனமாக நடிக்கும் சுஜிதா இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வர தற்போது கேக் கட் செய்து கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here