பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது ஜீவா அசிங்கப்பட்டு நிற்கும் நிலையில் ஜனார்த்தனன் இது தான் சாக்கு என்று அவரை வீட்டோடு மாப்பிள்ளையாக்க திட்டம் போட்டு வருகிறார். மேலும் நடக்கும் கொடுமைகளை வைத்து பார்த்தால் கண்டிப்பாக ஜீவா வீட்டை விட்டு கிளம்ப அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

நேற்று வெளியான எபிசோடில் கூட ஜீவா காரை எடுக்க செல்லும்போது, பார்வதி மூஞ்சியில் அடித்தார் போல பேசி விட்டார். இதனால் ஜீவா மேலும் கூனி குறுகி தான் போனார். இந்நிலையில் இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீண்டும் எதோ ஒரு சம்பவம் நடக்க போகிறது.
அதாவது, கண்ணன் ஐஸ்வர்யாவை வைத்து தான் பிரச்சனை எழ போகிறது. அதனால் தான் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி விலகியுள்ளார். ஏனெனில் இனி வரும் கதாபாத்திரம் தனது கெரியரை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரச்சனை வெடித்து ஜீவா மொத்தமாக வீட்டை விட்டு கிளம்ப போகிறார். ஏற்கனவே சம்பளம் விஷயத்தில் கண்ணன் ஜீவாவை அசிங்கப்படுத்தியுள்ளார். எனவே மீண்டும் அசிங்கப்படும் ஜீவா, வீட்டை விட்டு மொத்தமாக கிளம்ப வாய்ப்பிருக்கிறது. மேலும் இன்னொரு பக்கம் பார்வதிக்கு மீனாவை ஏற்கனவே பிடிக்காது. முல்லையை ஜனார்த்தனன் அசிங்கப்படுத்தியதை மனதில் வைத்து கொண்டு ஜீவாவை சம்பாதிக்க வக்கு இல்லை என்று சொல்லி அசிங்கப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இனி கதை இப்படி தான் நகரப்போகிறது.