இதெல்லாம் உனக்கு தேவையாடி.., அசிங்கப்பட்டு நிற்கும் ஐஸ்வர்யா.., கண்ணை திட்டித்தீர்க்கும் ஜீவா!!!

0
இதெல்லாம் உனக்கு தேவையாடி.., அசிங்கப்பட்டு நிற்கும் ஐஸ்வர்யா.., கண்ணை திட்டித்தீர்க்கும் ஜீவா!!!
இதெல்லாம் உனக்கு தேவையாடி.., அசிங்கப்பட்டு நிற்கும் ஐஸ்வர்யா.., கண்ணை திட்டித்தீர்க்கும் ஜீவா!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் மீனா நடந்த விஷயத்தை ஜீவாவிடம் சொல்ல அவரும் பதறியடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். இந்த பக்கம் ஐஸ்வர்யா அழுது கொண்டிருக்க கண்ணன் புலம்புகிறார். அப்போது போன் வர அதை எடுத்து ஐஸ்வர்யா மண்டபத்தில் இருந்து பேசுறாங்க நீ பேசு என்று கண்ணனிடம் கொடுக்க, கண்ணன் வளைகாப்பு நடக்காது எல்லாரும் வீட்டுக்கு போயிருங்க என்று கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சியான கஸ்தூரி வளைகாப்பை நிறுத்திட்டா கடன் வாங்குன பணத்தை எப்படி கொடுப்பீங்க என சண்டை போடுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அடுத்ததாக கண்ணன் கதிரை பார்க்க ஸ்டேஷனுக்கு செல்கிறார். இதை தொடர்ந்து மீனா தனம் வீட்டுக்கு வந்து நடந்த விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இதை கேட்டு முல்லையின் அம்மாவும் கொந்தளிக்கிறார். அடுத்ததாக போலீஸ் ஸ்டேஷன்க்கு சென்ற கண்ணன் கதிரிடம் மன்னிப்பு கேட்க, அப்போது ஜீவா அங்கே வர, ஜீவாவும் கதிரிடம் போய் பேசிவிட்டு வெளியே வந்து கண்ணனை திட்டுகிறார்.

தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்த குஜராத்…, மும்பை அணியை வெளியேற்றி அசத்தல்!!

அடுத்ததாக கதிரை வெளியே எடுக்க மூர்த்தி வக்கீல் இடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஜீவா, அண்ணா எப்படியாவது கதிரை வெளியே எடுத்து விட வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கண்ணனை பார்த்ததும் மூர்த்தி கோபத்தோடு இவன எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தா? எல்லாத்துக்கும் காரணமே இவன்தான் என்று திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here