
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் கண்ணன் அடிவாங்குனதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க, அப்போது கதிர் வீட்டுக்கு வருகிறார். கதிர் கண்ணன் எங்கே என்று கேட்க ஐஸ்வர்யா சொல்லாமல் மறைக்க, கஸ்தூரி நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்கிறார். மேலும் ஐஸ்வர்யாவை தப்பா பேசியதாகவும் சொல்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதை கேட்டு ஆத்திரமடைந்த கதிர் கண்ணனை அழைத்து கொண்டு அந்த வங்கி அதிகாரிகளை தேடி போய் அடி வெளுத்து வாங்குகிறார். இந்த பக்கம் கஸ்தூரி ஐஸ்வர்யாவிடம் நீ எவ்வளவு கடன் வாங்கி வச்சுருக்க என்று சத்தம் போட ஐஸ்வர்யா எதுவும் பேச முடியாமல் தலைகுனிகிறார். மேலும் தனி குடுத்தனம் வந்த கொஞ்ச நாள்ல இவ்வளவு லட்சம் கடனா என அசிங்கப்படுத்துகிறார். மேலும் இவ்வளவு பண்ண உனக்கு வளைகாப்பு கேக்குதா என திட்டுகிறார்.
நீ தனம் வீட்டுலையே இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை இருந்திருக்காது என்று சொல்லி சத்தம் போடுகிறார். இதோடு நிறுத்தி கொள்ளாமல் உன்ன நம்பி நா கடன் வாங்கிட்டேன். உன்னால ஏன் வாழ்க்கையே போக போது என சொல்லி கதறுகிறார். இந்த பக்கம் மூர்த்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் வளைகாப்புக்கு கிளம்ப மூர்த்தி வரமாட்டேன் என்று சொல்ல அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கின்றனர். அந்த நேரத்தில் போலீஸ் வீட்டுக்கு வர, இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.