மூர்த்தி குடும்பத்தால் கதிர், முல்லைக்கு நடக்க இருக்கும் அவமானம்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி திருப்பங்கள்!!

0
மூர்த்தி குடும்பத்தால் கதிர், முல்லைக்கு நடக்க இருக்கும் அவமானம்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி திருப்பங்கள்!!
மூர்த்தி குடும்பத்தால் கதிர், முல்லைக்கு நடக்க இருக்கும் அவமானம்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி திருப்பங்கள்!!

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல திருப்பங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. கதிர் எவ்வளவு சொல்லியும் முல்லை கட்டாயப்படுத்தி சமையல் போட்டிக்கு அழைத்து செல்கிறார். அந்த போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் கதிர், முல்லை மீது சக போட்டியாளர்கள் அதிக கோபத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் கதிர், முல்லை எங்களுக்கு முக்கியமான வேலை உள்ளது. நாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என போட்டி நடத்துபவர்களிடம் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் போட்டியின் பாதியில் விலக முடியாது என கூறிவிடுகின்றனர்.

மறுபுறம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பத்திரப்பதிவிற்காக அலுவலகத்தில் காத்துக் கொண்டுள்ளனர். ஆனால் கதிர் அங்கு வராததால் குடும்பமே அவர் மீது கோபப்படுகின்றனர். இந்நிலையில் போட்டியில் இருந்து விலக முடியாததால் அவர்கள் இறுதி சுற்று வரை விளையாடும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

நயன்தாரா இடத்தை தட்டி பறித்த வனிதா.., கடைசில லேடி சூப்பர் ஸ்டார் கிட்டயே வேலையை காட்டிடீங்களே!!

ஆனால் ஒரு புறம் சந்தோஷமடையும் முல்லை எப்படியாவது போட்டியில் வெற்றி பெற்று 10 லட்சம் பணத்துடன் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழும் ஆசையில் உள்ளார். ஆனால் குடும்பமே இவர்கள் மீது கோபமாக இருப்பதால் அடுத்து வரும் எபிசோடுகளில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here