பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி கதிருக்கு ஜோடி இவர் தான்.., இணையத்தில் வைரலாகும் தகவல்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி கதிருக்கு ஜோடி இவர் தான்.., இணையத்தில் வைரலாகும் தகவல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி கதிருக்கு ஜோடி இவர் தான்.., இணையத்தில் வைரலாகும் தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது காவியா அதிகாரபூர்வமாக விலகியுள்ள நிலையில் தற்போது அவருக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் கசிந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்ப ஒற்றுமையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதைக்களம். வெள்ளித்திரையில் இந்த கதையம்சம் ஒர்க்அவுட்டாகவே அதனை சின்னத்திரையிலும் கொண்டு வந்தனர். எடுத்த எடுப்பிலேயே சீரியல் பிக்கப் ஆனது.

ஆரம்பத்தில் இருந்த கதைக்களத்திற்கும் இப்பொழுது நகர்ந்து கொண்டிருக்கும் கதைக்களத்திற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அதாவது இப்பொழுது குடும்பம் மொத்தமும் பிரிந்து பிரச்சனைகளுடனே வாழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் முல்லை கதாபாத்திரம் தான் அதிகமாக பேசப்பட்டது. ஆனால் சித்ரா மறைவிற்கு பிறகு சீரியல் கொஞ்சம் ஆட்டம் கண்டு போனது.

காவியா தனது நடிப்பை வெளிப்படுத்தினாலும் அந்த அளவிற்கு ரீச் கொடுக்கவில்லை. இப்படி இருக்க இப்பொழுது காவியாவும் இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி விட்டது. இந்நிலையில் அவருக்கு பதிலாக ராஜா ராணி சீரியலில் ஆதிக்கு ஜோடியாக களமிறங்கியுள்ள ஜெஸ்ஸி தான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏற்கனவே அவர் ராஜா ராணி சீரியலில் அடிக்கடி தான் வந்து போகிறார். இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலில் அவரால் முழுமூச்சாக நடிக்க முடியும் என்பதால் செலக்ட் செய்துள்ளதாக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here