பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த பெரிய வெற்றி.., கண்கலங்க வைத்த ஸ்டாலின் முத்து பதிவு!!

0

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருபவர் ஸ்டாலின் முத்து, அவரது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது முக்கிய போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

புதிய சாதனை:

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின்முத்து, குமரன், வெங்கட்,ஹேமா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்தொடர் அண்ணன் தம்பிகளின் பாசம், கூட்டுக்குடும்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு கதை சீரியலில் வருவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சீரியல் 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை நெருங்கி உள்ளது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூத்த அண்ணன் “மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் முத்து”, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் ” இன்று பாண்டியன் ஸ்டோர் ஆயிரம் ஆவது அத்தியாயம் எட்டியுள்ளது.

சத்தியமூர்த்தி ஆக வாழ்வதற்கு என்னை தேர்வு செய்தவர்களுக்கும், விஜய் தொலைக்காட்சியை சார்ந்தவர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், சக நடிகர் நடிகைகளுக்கும் மற்றும் இத்தொடரை வெற்றியடைய முழு முதல் காரணமாகிய ரசிகர்களாகிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவோடு தொடர்ந்து பயணிக்கிறோம்” என்று அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டை தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்வதுடன், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here