மயக்கம் போட்டு விழுந்த முல்லை – கர்ப்பத்தை உறுதி செய்த மருத்துவர்கள்?? சூடு பிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0
மயக்கம் போட்டு விழுந்த முல்லை - கர்ப்பத்தை உறுதி செய்த மருத்துவர்கள்! சூடு பிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!
மயக்கம் போட்டு விழுந்த முல்லை - கர்ப்பத்தை உறுதி செய்த மருத்துவர்கள்! சூடு பிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கர்ப்பமாக இருக்கும் செய்தியை மருத்துவர்கள் உறுதி படுத்தியதும், ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்கும் அதிரடி ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிரடி ப்ரோமோ :

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், கதிரின் மனைவி முல்லைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் இல்லை என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்குகிறது. செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பாக்கியத்தை உண்டாக்கலாம் என்று குடும்பத்தினர் முடிவு செய்து, வீடு கட்ட போகும் புதிய பிளானை தற்காலிமாக நிறுத்தி வைக்க முடிவெடுக்கின்றனர். ஆனால், இந்த முடிவு பிடிக்காமல், ஜீவா மனைவி மீனா தன் குடும்பத்துடன் சண்டை போடுகிறார்.

இந்த நிலையில், முல்லை குழந்தை பாக்கியம் வேண்டி, கடுமையான விரதம் இருக்க போவதாக தெரிவிக்கிறார். ஆனால், ஒட்டுமொத்த குடும்பமும் இதனை மறுக்கிறது. இந்த நிலையில், திடீரென மயங்கி சரியும் முல்லையை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்த காட்சிகள் இனிவரும் எபிசோட்களில் காட்டப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here