ஜனார்தனனுக்கு இடைஞ்சலாக வரும் மல்லி, வெறுப்பின் உச்சத்தில் மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வீடு விற்பது குறித்து பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டுள்ளது. மூர்த்தி வீட்டை விற்கலாம் என முடிவு செய்திருந்த போதே ஜனார்த்தனன் வீட்டை வாங்கி கொள்வதாக சொல்லி இருந்தார். மூர்த்தியும் சிறிது காலம் யோசித்து விட்டு ஜனார்தனனுக்கே தரலாம் என்று முடிவெடுத்து விட்டார். ஜனார்த்தனன் அந்த வீட்டை ஜீவா பெயரில் எழுதி வைக்கலாம் என்று முடிவெடுத்திருந்தார்.


இப்படி இருக்க இதுதான் இங்கு பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. முல்லையின் அம்மா பார்வதியும் , மல்லியும் மூர்த்தி வீட்டிற்கு வருகின்றனர். என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க வீட்டை ஜீவா பேருக்கு சாதூரியமா எழுதி தருவிங்க எங்க மாப்பிள்ளை மட்டும் அங்க காசு இல்லாம கஷ்டப்படணுமா?? என்று கத்துகிறார். அதற்கு தனம் வீட்டை மீனா அப்பா கிட்ட விற்க போறோம், அதுல என்ன இருக்கு என்று சொல்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதற்கு மல்லி என்கிட்ட சொல்லி இருந்தா எக்ஸ்ட்ரா ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கி இருப்பேன் என்று சொல்கிறார். ஆனால் தனம் அதற்கு ஒத்து கொள்ளாமல் கண்டிப்பா மீனா அப்பாவிற்கு தான் வீட்டை விற்போம் என்று சொல்கிறார். ஆனாலும் பார்வதி விடாமல் சண்டைக்கு இழுக்கிறார். அதாவது வீட்டை விற்கணும்னு ஆகிடுச்சு அப்போ காசை பிரிச்சு கொடுங்க என்று சொல்கிறார். இதனால் தனத்திற்கு ஷாக்காகிறது. மேலும் மீனாவிற்கு பற்றிக்கொண்டு வருகிறது. எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருக்கிறார். கண்டிப்பாக இதனால் வீட்டில் பெரிய பிரச்சனை வெடிக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here