ஹோட்டலில் கதிரிடம் சவால் விட்டு கேவலப்படுத்தும் மல்லி.., வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் தனியாக ஹோட்டல் ஆரம்பித்திருக்கும் நிலையில் தற்போது மல்லி வந்து வம்புக்கு இழுக்கிறார். அந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கதிர் கடை திறப்பு விழாவிற்கு அண்ணன் வருவார் என்று காத்திருக்க கடைசி வரை வராததால் அவரே ஆரம்பித்து விடுகிறார். ஆனால் மூர்த்தி ஓரமாக ஒளிந்து இருந்து தம்பியின் வெற்றியை ரசித்து கொண்டுள்ளார். மேலும் ஒரு சின்ன பெண்ணிடம் காசு கொடுத்து சாப்பாடு வாங்கி வர சொல்கிறார்.

இதனை கதிர் கண்டு பிடிக்க அண்ணனின் அன்பை பார்த்து ஆனந்த கண்ணீரே வருகிறது. இப்படி ஒரு பக்கம் பாசப்போராட்டத்துடன் போய்க்கொண்டிருக்க, அடுத்ததாக மல்லி வந்து கதிரை சீண்டி பார்க்கிறார். அதாவது ஹோட்டலில் அன்றைய வியாபாரம் நிறைவடைய பணத்தை எண்ணி பார்க்கின்றனர்.

அப்பொழுது மல்லி, முல்லையை பார்த்து வரவு செலவை கணக்கிடும்படி சொல்கிறார். அப்பொழுது ரூ.1000 நஷ்டமாக வருகிறது. அதற்கு மல்லி, முதல் நாளே இப்படி இருக்கு என்று சொல்ல இதனால் கடுப்பாகும் கதிர் அடுத்து எப்படியும் லாபம் பார்த்துடுவேன் என்று சொல்கிறார். அதற்கு மல்லி இன்னும் 1 மாசத்துல ரூ.50 ஆயிரம் லாபம் சம்பாதிச்சு காட்டு பாப்போம் என்று சவால் விடுகிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here