குலதெய்வம் கோவிலுக்கு செல்ல கண்ணன் ஐஸ்வர்யாவை அழைக்க முடிவெடுக்கும் மூர்த்தி குடும்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்த நிலையில் தற்போது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி இறந்ததற்கு பிறகு வீடே கலகலப்பு இழந்து வெறுமையாக உள்ளது. கண்ணன் ஒரு பக்கம் அம்மாவை இழந்து தவித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கண்ணன் மீது மூர்த்திக்கு ஓரளவிற்கு கோவம் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனால் கண்ணனின் செய்கைகள் தான் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது லட்சுமி தனத்தின் கனவில் வந்து செல்கிறார். அடுத்த நாள் முருகன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று படையல் வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதனை மூர்த்தியிடம் சொல்ல அவரும் ஒத்துக்கொள்கிறார். அதன் பின் கண்ணன் ஐஸ்வர்யாவை அழைத்து செல்லலாமா என்று தனம் கேட்க உடனே மூர்த்தி ஒத்துக்கொள்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோசத்தில் திளைக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here