கண்ணன் கஷ்டப்படுவதை பார்த்து 1 மாத மளிகை சாமானை அனுப்பி விடும் மூர்த்தி – வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா கண்ணனுக்கு தனியாக வீடு கிடைத்துள்ள நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மூர்த்திக்கு தெரிந்த ஆள் ஒருவர் கண்ணன், ஐஸ்வர்யாவின் நிலையை பார்த்து தானாக முன் வருகிறார். ஒரு வேலை மீனாவின் அப்பா வேலையாக இருக்குமோ?? என்ற சந்தேகம் அனைவருக்குமே உள்ளது.

அந்த நபர் ஐஸ்வர்யா கண்ணனுக்கு வீட்டை காட்டுகின்றார். ஐஸ்வர்யா கண்ணனுக்கு அந்த வீடு பிடித்து போகிறது. இந்நிலையில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. கையில் இருக்கும் பணத்தை வைத்து கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்குகின்றனர்.

பாய், தலையணை, வாளி என அனைத்தையும் வாங்கி கொண்டு வர அப்பொழுது பைக்கில் வரும் மூர்த்தி தனமும் அவர்களை இடித்து விடுகின்றனர். அவர்களை பார்த்து கோவமாக சென்று விடுகின்றனர்.

ஆனால் தனத்திற்கு மனசு கேட்கவே இல்லை. குடவுனில் தம்பிகளிடம் மூர்த்தி இல்லாத சமயம் பார்த்து கண்ணனுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை தரலாமா?? என்று கேட்கிறார். இதனை அங்கு வரும் மூர்த்தியும் கேட்டு விடுகிறார். உடனே தெரிந்த ஆள் மூலம் மளிகை சாமான்களை வீட்டில் வாசலில் வைக்கிறார்.

ஐஸ்வர்யா, கண்ணன் பொருட்களை சரிபார்க்க சமைப்பதற்கு எந்த பொருளும் இல்லையே என்று யோசிக்க வெளியே வந்து பார்த்து அந்த மூட்டையில் அண்ணனின் கையெழுத்து இருப்பதை பார்த்து கண் கலங்குகிறார். இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here