கண்ணன் வருவதற்குள் லட்சுமியை அடக்கம் செய்ய தூக்கி செல்லும் மூர்த்தி குடும்பம் – கண்கலங்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் விஜய் டிவி புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நாளுக்கு நாள் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. யாருமே எதிர்பாராத விதமாக லட்சுமி இறந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்த பழி எப்படியும் கண்ணனை வந்து தான் சேரும்.

ஏற்கனவே மூர்த்தி அவரை வீட்டுக்குள் சேர்க்காமல் இருக்க இப்பொழுது இந்த துக்கம் நிகழ்ந்து கண்ணனின் மீது மேலும் அவர்களுக்கு வெறுப்பு வளர காரணமாகிறது. ஐஸ்வர்யாவிற்கு விஷயம் தெரிந்து ஓடி வர முல்லையின் அம்மா பார்வதி அவரை வீட்டுக்குளேயே விடவில்லை.

ஐஸ்வர்யா வெளியேவே அமர்ந்து கதறி அழுகிறார். கண்ணனுக்கு விஷயத்தையும் சொல்ல முடியாமல் இருக்க சங்கடமான சூழ்நிலை நிலவி வருகிறது.லட்சுமியை அடக்கம் செய்ய அனைத்து காரியங்களை செய்ய கடைசியில் கண்ணன் வரும் வரை அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் கண்ணன் வர தாமதமாகும் என்று சொன்னதும் சடலத்தை எடுக்க சொல்கின்றனர். தனம் கண்ணன் வந்தவுடன் தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று சொல்ல ஆனால் சூழ்நிலை கை மீறி செல்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் லட்சுமியை தூக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here