தனத்திற்கு பிறக்கும் 2வது குழந்தையால் மகிழ்ச்சியில் குதிக்கும் மூர்த்தி., உணர்வுபூர்வ காட்சிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பதால் அவர் வயிற்றில் வளர்ந்த குழந்தையை ஆபரேஷன் செய்து வெளியில் எடுக்க உள்ளனர். இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் தனத்தை பிரசவ அறைக்குள் அனுப்பிவிட்டு மூர்த்தி குடும்பத்தினர் பெரும் பதற்றத்துடன் இருக்கின்றனர். அந்த நேரத்தில் ஆபரேஷன் அறையை விட்டு வெளியே வந்த மருத்துவர் தனத்திற்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக கூறுகிறார். இதை கேட்ட ஒட்டுமொத்த மூர்த்தி குடும்பமும் மகிழ்ச்சியில் குதிக்கின்றனர்.


பின்னர் குழந்தையை அனைவரையும் தூக்கி கொஞ்சுகின்றனர். இதன் பிறகு தனம், மீனா மற்றும் முல்லையிடம் குழந்தை எப்படி இருக்கிறாள் என கேட்கிறார். அதற்கு முல்லை அதெல்லாம் ஆரோக்கியமாக இருக்கிறாள். அக்கா என கூறுகிறார். இதன் பின்னர் மீனா தனத்திடம், இதுக்கு போய் எப்படி பயந்தீர்கள். இப்போ அதெல்லாம் தேவையில்லாத பயம் என்பது தெரிகிறதா என கேட்கிறார். இப்படி உணர்வுபூர்வமான காட்சிகளுடன் இந்த ப்ரோமோ அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here