ராஜமாதாவாக தன்னை தானே ரசித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா… லைக்ஸ்களை அள்ளிய புகைப்படங்கள்!!!  

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பேமஸ் சீரியலில் வீட்டின் மூன்றாவது தம்பி கதிரின் மனைவி முல்லையாக நடித்து கொண்டிருப்பவர் காவ்யா. இவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.

பல்வேறு திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது நடைமுறையில் குறைந்து போன கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து கதை நகர்கிறது. மேலும் இந்த சீரியல் நொடிக்கு நொடி பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகம். மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஒரு குடும்பமாக நடித்திருக்கிறார்கள் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படிப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பவர் தான் காவ்யா. இவர் ஷார்ட் பிலிம்ஸ் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர். அதன் பின்னர் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். எனினும் அந்த சீரியல் அவருக்கு அந்த அளவுக்கு பெயர் வாங்கி தரவில்லை.

அப்பொழுது அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மூலம் அவர் எக்கசக்க ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். மேலும் இவர் சோசியல் மீடியாவிலும் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தனக்கு பரிசாக வந்த தன்னுடைய போட்டோ பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த புகைப்படங்களில் தன் அழகை தானே வியந்து பார்த்து கொண்டபடி உள்ளார். இந்த புகைப்படங்கள் எக்கசக்க லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here