தாறுமாறு அழகுடன் சுடிதாரில் மனதை கொள்ளை கொள்ளும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை…!வைரல் புகைப்படங்கள் உள்ளே!!!

0

விஜய் டிவியின் கூட்டு குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவ்யா. தற்போது இவர் செம அழகில் சுடிதாரில் போட்டோஷூட் ஒன்றை  நடத்தி உள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை பறித்து உள்ளார்.

குறும்படங்கள் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை  தொடங்கியவர் நடிகை காவ்யா. இவர், என் காதலுக்கு மொழி இல்லை, ஆயுதம் ஏந்திய கைகள், பாப்பா, அகலாதே, இல் தக்க சைய உள்ளிட்ட பல குறும்பங்களில் தனது  நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இவர் நடிப்பில் வெளியான வெர்ஜின் கல்யாணம் என்ற குறும்படம் மிக பிரபலமான ஒன்று. அதை தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில்  நடித்த சித்ரா அவர்களின் மறைவுக்கு பிறகு அந்த வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. மேலும் அவர் இந்த சீரியலில் மூர்த்தியின் இளைய தம்பி கதிரின்  மனைவியாக நடித்து அதிக அளவில் புகழடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீலம் மற்றும் சிவப்பு நிறம் கலந்த கலர் சுடிதாரில் மனதை அள்ளும் அழகில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here