கையில் 5 அடி பாம்புடன் பிரபல நடிகையுடன் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – ஷாக்கான ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஸ்டாலின் பிரபல நடிகையுடன் பெரிய பாம்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரம் தான் அனைவர் மத்தியிலும் அதிகம் பேசப்பட்டது. ஏனெனில் தனி ஆளாக இருந்து தனது தம்பிகளை இந்த அளவிற்கு ஆளாக்கியுள்ளார். தற்போது வரை திருமணம் செய்து அனைவரையும் குடும்பத்தையே பார்த்து கொண்டுள்ளார்.

மேலும் தனமும் திருமணம் ஆகி வந்த நாளில் இருந்து தன் குழந்தை போலவே பார்த்து கொண்டு வருகிறார்.அனைவரும் குழந்தை இல்லை என்று எவ்வளவு பேசினாலும் எதையுமே காதில் வாங்காமல் தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்து வந்தனர்.

இப்படி தனது தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் மூர்த்தி. இவர் ஆரம்பத்தில் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். ஆனால் அவரை அவ்வளவாக நாம் பார்த்திருக்க மாட்டோம். விஜய் டிவியில் நடித்ததன் மூலம் தான் இந்த அளவிற்கு பிரபலமானார்.

இப்பொழுது மக்கள் மத்தியில் மூர்த்தியாக நிலைத்து விட்டார். இந்நிலையில் அவர் சரவணன் மீனாட்சி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த குயிலி உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுவும் கையில் மிகப்பெரிய பாம்புடன் நின்று இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here