‘உங்க கடுப்பை ஏன் இப்படி காட்டுறீங்க’ – கொந்தளிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா!!

0
pandian stores meena
pandian stores meena

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா மற்றும் குமரனை கேலிபண்ணும் விதமாக நெகடிவ் கமன்ட் செய்து வந்தனர். அதற்கு ஹேமா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா தற்கொலை செய்துகொண்டதில் இருந்தே ரசிகர்கள் பலரும் வேதனையில் தான் உள்ளனர். அதிலும் அந்த முல்லை கதாபாத்திரத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாது என்றும் கூறியிருந்தனர். ஆனால் அதிரடியாக களமிறங்கியவர் தான் ‘பாரதி கண்ணம்மா’ காவியா. எல்லா நடிகைகளும் வர தயங்க, ஆனால் காவியா தான் இதற்கு ஒத்துக்கொண்டார். அவரது நண்பர்களும் அவரை ஊக்குவிக்க தான் செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது சித்ரா அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார் காவியா. ஆனாலும் ரசிகர்கள் அவரை திட்டிக்கொண்டு தான் உள்ளனர். ஆனாலும் எதையுமே காதில் வாங்காமல் தான் வேலையை பார்த்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமாவின் ரசிகர்கள் சில போலியான ஐடி மூலம் காவியா, கதிரை இழிவாக பேசியுள்ளனர்.

meena
meena

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ‘பிக் பாஸ்’ ஓவியா – ட்ரெண்டாகும் புகைப்படம்!!

அதனை அவரது ரசிகர்கள் ஹேமாவின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர். அதற்கு ஹேமா பதிலடி தரும் விதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். யாரையும் யாரும் அசிங்கப்படுத்தி பேசாதீங்க. இதனை உங்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். யாரையும் அசிங்கப்படுத்தி என்ன உயர்த்தி பேச வேண்டாம். தயவு செஞ்சு அந்த பதிவை நீக்குங்க இல்லனா நான் ரிப்போர்ட் பண்ண வேண்டி வரும் என்று கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here