சின்ன திரையில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தற்போது 600 எபிசோடுகளை கடந்துள்ளது. இதனை அடுத்து அந்த சீரியலின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அந்த வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்று கூறினால் அது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான். இந்த சீரியல் கூட்டு குடும்ப வாழ்க்கையின் எதார்தத்தினை மிகவும் அழகாக எடுத்து காட்டுகிறது.

சுவையான “ரவா குலாப் ஜாமுன்” ரெசிபி – செஞ்சு தான் பாருங்களேன்!!

இதன் காரணமாகவே இந்த சீரியலிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. தற்போது பல முக்கிய ட்விஸ்டுகளுடன் கதை நகர்ந்து வருகிறது. கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து இருப்பதனை தனம் பார்த்து விடுகிறார். இதனை அடுத்து அவர் எந்த மாதிரியான முடிவினை எடுக்க போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்து இருக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பம் முதல் தற்போது வரை டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் என்றால் அது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான். இந்த சீரியல் இன்றுடன் 600 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். அந்த சீரியல் நடிகர்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here