இனி நான் உன் தம்பி கிடையாது.., இதோடு ஒட்டு உறவே வேணாம்…, ஜீவா எடுத்த அதிரடி முடிவு.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது குடும்பமே பிரியும் அளவிற்கு வந்து விட்டது. அதாவது, மீனாவின் தங்கை திருமணத்தில் கண்ணன், கதிர் தனித்தனியாக மொய் வைக்க இந்த விஷயம் ஜீவா, மூர்த்திக்கு தெரியாது. இப்படி இருக்க இப்பொழுது ப்ரோமோ வைரலாகி வருகிறது.

அதாவது ஜீவா மாமனார் வீட்டில் எல்லா வேலைகளையும் பார்த்து கொண்டிருக்க அப்பொழுது மொய் எழுதிய பெயரை ஜனார்த்தனன் பார்த்து கொண்டிருக்க அதில் ஜீவா-மீனா பெயர் மட்டும் இல்லாததை பார்த்து ஷாக்காகிறார். அதுமட்டுமில்லாமல் அதனை மீனா-ஜீவாவிடம் காட்ட ஷாக்காகின்றனர்.

நேராக மூர்த்தியிடம் சென்று எதுக்காக இப்படி என்ன அசிங்கப்படுத்துனீங்க, எங்க பெயரை ஏன் போடல என்று கேட்கிறார். மூர்த்திக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. உடனே தனம் வீட்டுக்கு போய் என்னனாலும் பேசிக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு ஜீவா தன்னால் அந்த வீட்டுக்கு வர முடியாது என்று சொல்கிறார். மேலும் இனி உங்களுக்கு ரெண்டு தம்பிங்க மட்டும் தான். நான் கிடையாது என்று சொல்கிறார். குடும்பமே ஸ்தம்பித்து நிற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here