மூர்த்தியின் மூக்கை உடைத்த தனம்.., எங்க கிட்டயே வா.., பல திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!

0
மூர்த்தியின் மூக்கை உடைத்த தனம்.., எங்க கிட்டயே வா.., பல திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!
மூர்த்தியின் மூக்கை உடைத்த தனம்.., எங்க கிட்டயே வா.., பல திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!

தனம் மூர்த்தியிடம் ஹோட்டல் விஷயத்தில் எங்கள் மீது எந்த தப்பும் இல்லை அதை நாங்கள் நிரூபிப்போம் என சவால் விடுகிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. மூர்த்தி குடும்பத்திற்கு தொடர்ந்து சிக்கல்கள் வந்த வண்ணம் இருந்து கொண்டே தான் உள்ளது. இத்தனை நாள் ஜனார்த்தனன் படாதபாடு படுத்தி எடுத்து விட்டார். இப்போது கதிர் ஹோட்டலுக்கு ஆப்பு வைக்க ஊரில் உள்ள மற்றொரு ஹோட்டல் உரிமையாளர் பல சதித்திட்டங்களை செயல்படுத்துகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இறுதியில் கடையில் உணவு தரமாக இல்லை என அதிகாரிகள் ஹோட்டலுக்கு சீல் வைக்கின்றன. இதை வைத்து மூர்த்தி வீட்டில் ஒரு பிரச்சனையே செய்து விடுகிறார். மேலும் தனத்திடம் ஹோட்டல் நடத்துவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்று மறைமுகமாக திட்டுகிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத தனம் கண்டிப்பாக அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து ஹோட்டலை திறப்போம் என சவால் விடுகிறார்.

என்னை இப்படி நினைக்காதீங்க, நான் வேற மாதிரி – பாரதி கண்ணம்மா வெண்பா திடீர் பதிவு!!

இந்நிலையில் தற்போது வெளியாகிய ப்ரோமோவில் ஹோட்டலில் வேலை பார்த்த ஒரு நபர் தான் சாப்பாட்டில் கரப்பான் பூச்சியை போட்டுள்ளார் என தனம் கண்டுபிடிக்கிறார். பின் இந்த விஷயத்தை தனம் உணவுத்துறை அதிகாரிகள் முன் நிரூபித்து ஹோட்டலை வெற்றிகரமாக திறக்கிறார். இதை பார்த்த மூர்த்தி தனத்தைப் பார்க்க பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் மூர்த்தி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here