பாசத்துடன் பேச வந்த கதிரிடம் மூஞ்சியை திருப்பி கொள்ளும் மூர்த்தி குடும்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத விதமாக கதிரும் மூர்த்தியும் கோவிலில் சந்தித்து கொள்கின்றனர். அங்கு ஒரு பாச போராட்டமே நிகழ்கிறது. அந்த ப்ரோமோ இப்பொழுது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கதிர் தன்னுடைய தன்மானத்திற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டே வெளியேறி விட்டார். இதனால் மூர்த்திக்கு ஹார்ட் அட்டாக் வர குடும்பமே நிலைகுலைந்து போகிறது. மேலும் கதிர் அப்பொழுதாவது வீட்டிற்கு வருவார் என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை.

இதனால் தனமும் மூர்த்தியும் நொந்து போகின்றனர். இதனால் கதிரிடம் பேச்சு வார்த்தையே இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் மூர்த்தி குடும்பத்தோடு கோவிலுக்கு வருகிறார். அப்பொழுது முல்லையும் கதிரும் கோவிலுக்கு வர மூர்த்திக்கு கதிரை பார்த்ததில் சந்தோசம் தான் என்றாலும் அதனை வெளிக்காட்டவில்லை.

மேலும் கண்ணன் ஒரு பக்கம் பிரசாதம் கொடுத்து கொண்டிருக்க கதிரும் முல்லையும் வரிசையில் நிற்கின்றனர். ஆனால் கண்ணன் அந்த பிரசாதத்தை கொடுக்கவே இல்லை. ஏனெனில் பிரசாதம் தீர்ந்து விடுகிறது. அதன் பிறகு மூர்த்தி தான் பிரசாதத்தை ஒரு இடத்தில் வைக்க அதனை கதிர் சந்தோசமாக சாப்பிடுகிறார். இதனால் மூர்த்தியும் கண் கலங்குகிறார். இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here