பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் வளைகாப்பு விழா – வைரலாகும் மாஸ் கிளிக்ஸ்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூடிய விரைவில் தனத்தின் வளைகாப்பு விழா நடக்க இருக்கும் நிலையில் விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பான கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணனும் ஐஸ்வர்யாவும் காதலித்து வர இந்த விஷயம் எப்பொழுது வெளியில் தெரிய போகிறது என்றும் தெரியவில்லை. கஸ்தூரி இன்னும் வீட்டில் கண்ணன், ஐஸ்வர்யா காதல் விவகாரத்தை பற்றி எதுவும் சொல்லவும் இல்லை.

இப்படி இருக்க இன்றைய எபிசோடில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கோவிலுக்கு பின்னால் இருக்கும் சிறிய இடத்தில் அமர்ந்து பேசிகொண்டுள்ளனர். இதனை கஸ்தூரி பார்த்தும் விடுகிறார்.

மேலும் இதனை வீட்டில் மூர்த்தியிடம் சொல்ல வீடே ரணகளமாகிறது. ஏற்கனவே தனத்திற்கு இவர்கள் மீது சந்தேகம் இருக்க தான் செய்கிறது. இப்படி பரபரப்பாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்க தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி கூடிய விரைவில் நடைபெறவுள்ளது.

அதற்கான ஷூட்டிங் அனைத்தும் நடந்து கொண்டுள்ளது. அந்த மண்டபத்தில் வைத்து தான் மீனா தனத்தின் பிறந்த நாளை கொண்டாடினர். இந்நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here