வாழ்க்கையில முக்கியமான கட்டம்., என்னை மீறி உடைஞ்சு அழுதேன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் திடீர் பதிவு!!

0
வாழ்க்கையில முக்கியமான கட்டம்., என்னை மீறி உடைஞ்சு அழுதேன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் திடீர் பதிவு!!வாழ்க்கையில முக்கியமான கட்டம்., என்னை மீறி உடைஞ்சு அழுதேன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் திடீர் பதிவு!!
வாழ்க்கையில முக்கியமான கட்டம்., என்னை மீறி உடைஞ்சு அழுதேன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் திடீர் பதிவு!!வாழ்க்கையில முக்கியமான கட்டம்., என்னை மீறி உடைஞ்சு அழுதேன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் திடீர் பதிவு!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் குமரன், தன் வாழ்க்கையில் நடந்த சோகமான ஒரு விஷயம் பற்றி, ஓபனாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

குமரன் பதிவு :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், மூர்த்தியின் தம்பியாக கதிர் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமரன். மிகச் சிறந்த நடன கலைஞரான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பெரிய அளவில் பேசப்பட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த நிகழ்ச்சியில் தான் இருந்த போது என்னென்ன சிக்கல்களை சந்தித்தேன் என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் 6000 பேருடன் போட்டி போட்டு, 6 மாதம் அந்த ஷோவில் கடுமையாக உழைத்தேன். கிட்டத்தட்ட பல்வேறு சிக்கல்களை தாண்டி டாப் 10 & டாப் 6 என பெரிய இடத்துக்கு வந்து விட்டேன்.

ஆனால் அந்த சமயத்தில் என் அப்பா என்னை கூப்பிட்டு, இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி திரிய போற? உன்னோட முடிவு தான் என்ன என திட்டினார். அந்த சமயத்தில் என்ன சொல்வது என தெரியாமல் என்னை மீறி உடைந்து அழுது விட்டேன். என் வாழ்க்கையில் அது ஒரு முக்கியமான கட்டம். அப்போது அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், இன்று என்னுடைய நிலையை பார்த்து அப்பா மிகவும் சந்தோஷப்படுகிறார். விரைவில் அவர் என்னை நினைத்து பெருமை படுவார் என உருக்கமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here