பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை இருந்த ஷூட்டிங் விடியோவை வெளியிட்ட கதிர் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கதிர் ஷூட்டிங் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்ப ஒற்றுமையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாலேயே மக்கள் மத்தியில் பிரபலமானது. ஒரு சராசரி கூட்டு குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான கதையை சொல்லி இருப்பதால் தான் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. இதில் சித்ரா தான் மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகை. அதனாலேயே அவரது இந்த இழப்பு பலரும் வேதனையாக்கியது. இன்று வரை பலரும் சித்ராவின் மரணம் குறித்து வருந்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவிற்கு பதிலாக “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிகர் அருணிற்கு தங்கையாக நடித்த காவியா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மக்கள் அவரை அந்த கதாபாத்திரத்தில் ஏற்க மறுத்தனர். ஆனால், காவியாவின் நடிப்பு அனைவருக்கும் பிடித்து போய் அனைவரும் தற்போது அவரை ஏற்று கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிராக நடிக்கும் குமரன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ முல்லை மற்றும் கதிர் இருவரும் சென்னை போனபோது எடுக்கபட்ட ஷாட்ஸ். அதாவது விஜே சித்ரா நடித்த காட்சிகள் ஆகும். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி அனைவருக்கும் சித்ராவை நியாபகப்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த விடீயோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

முழு விடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here