அப்போ சீரியலில் இருந்து விலகுறது உண்மைதானா? – படத்திற்காக தயாராகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

காவ்யாவின் மெர்சல் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடரின் பாச பிணைப்பு கதைக்காக பல ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி வருகின்றனர்.  இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க காவ்யா கமிட்டானார்.

பார்ப்பதற்கு ஒரு ஜாடைக்கு இறந்து போன சித்ரா போன்று அவர் இருப்பதால் குறுகிய காலத்தில் இவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. இதையடுத்து, இவர் இந்த சீரியலை விட்டு விலகி நடிகர் கவின் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்தது.  இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவில் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று இவர் ஹெவி ஒர்கவுட் செய்யும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதனால் உண்மையிலேயே இவர் படத்துக்கு ரெடி ஆகி விட்டார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here