வண்ணம் இல்லா என் வாழ்விலே… வர்ணம் மீட்டுகிறாய்… பல வண்ண ஜாக்கெட்டில் பஞ்சவர்ண கிளியாக தோற்றமளித்த காவ்யா!!!

0
ரொம்ப Aged மாதிரி தெரியுறேனா?? தன் வயசை உளறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!!
ரொம்ப Aged மாதிரி தெரியுறேனா?? தன் வயசை உளறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் அமர்ந்தவர் காவ்யா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் வித விதமாக கலர்களை  கொண்ட ஜாக்கெட் அணிந்து கொண்டு உள்ளார்.

விஜய் டிவியின் வெற்றி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டின் இரண்டாவது தம்பி கதிரின் மனைவி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. இவர் ஷார்ட் பிலிம்கள் மூலம் பேமஸான ஒருவர். மேலும் இவரின் பல ஷார்ட் பிலிம்கள் நல்ல வரவேற்பை பெற்ற குறும்படங்கள் ஆகும். மேலும் அதில் அவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் அமைந்திருக்கும்.

இவைகள் மூலமாக தான் இவருக்கு சின்னத்திரை சீரியல் வாய்ப்பு கிடைத்தது. முதலில் அவர் கமிட்டான சீரியல் பாரதி கண்ணம்மா. அதன் பிறகு தீடிரென கிடைத்த வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் வீட்டிற்கு ஏற்ற மருமகளாக அனைவர் மீதும் அன்பு கொண்டு, அக்கறையாக பார்த்து கொள்ளும் காட்சிகளும் சரி, கதிருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளும் சரி அனைத்திலும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார்.

மேலும் இவரின் அதீத ஆசை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போன்று சாதிக்க வேண்டும் என்பதே. அதற்காக தீவிரமாக உழைத்து வருகிறார். இந்நிலையில்  தன்னுடைய ரசிகர்களை கவர அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பல வர்ணங்களை கொண்ட ஜாக்கெட் கொண்டு அணிந்து போஸ் கொடுத்து உள்ளார். மேலும் அதோடு சேர்த்து, சூர்யாவின் தூரிகா..என் தூரிகா… பாடலில் இடம்பெற்ற பாடலின் வரிகளை கேப்சனாக பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here