நான் மேக்கப் போட்டா அப்படி.., இல்லைனா இப்படி தான்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவின் ஒரிஜினல் புகைப்படம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

முல்லையாக நடித்து வரும் காவியா ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தவர். மேலும் இன்ஸ்டாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பல ரீல்ஸ், போட்டோஷூட் என தொடர்ந்து வெளியிட்டு வந்தார். தற்போது தான் இன்ஸ்டாவில் எளிதாக பேமஸ் ஆக முடிகிறதே.

பல படங்களில் நடித்தால் கூட கிடைக்காத புகழ் இந்த போட்டோஷூட்ஸ் ரீல்ஸ் மூலம் கிடைத்து விடுகிறது. அப்படி வாய்ப்பு கிடைத்து வந்தவர் தான் காவியா. தனது எளிமையான நடிப்பால் ஆரம்பத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் மக்களுக்கு பிடித்தமான நாயகியாகவும் மாறினார் காவியா.  சின்னத்திரையின் நயன்தாரா என்றும் அழைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அந்த மாதிரி. முல்லையாக அடக்க ஒடுக்கமாக பார்த்த காவியாவா இது?? என்று பலரையும் வாய் பிளக்க வைத்தார்.  இந்நிலையில் பல ரீல்ஸ், போட்டோஷூட் என தினமும் இன்ஸ்ட்டாவில் அடுக்கி வருகிறார்.

ரசிகர்கள் கூட்டமும் இவரது போட்டோஷூட்டை பார்க்க அலை மோதுகிறது. இந்நிலையில் தான் தற்போது சுத்தமாக மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here