தேவலோக மங்கையாக மாறி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – அசந்துப்போன ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது தேவலோகத்து தேவதையாய் மாறி ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

ஷார்ட் பிலிம் மூலம் பிரபலமான காவியா பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் காவியா. தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்திழுத்தார். அதன் பிறகு தான் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு கிடைத்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து அசத்தி வருகிறார். என்ன தான் சீரியல் அவருக்கு ஒரு பக்கம் காய் கொடுத்தாலும் இன்ஸ்டா மூலம் தான் பிரபலமாகி வருகிறார்.

தனது ஒட்டுமொத்த திறமைகளையும் அதிலேயே தான் வெளிப்படுத்தி வருகிறார். டான்ஸ், போட்டோஷூட், ரீல்ஸ் என ஒரு கலக்கு கலக்கி வருகிறார். நாள் தோறும் ஏதாவது ஒரு ரீல்ஸ் போட்டோஷூட் போடவில்லை எனில் இவருக்கும் தூக்கம் வராது, அவரது ரசிகர்களுக்கும் தூக்கம் வராது.

அந்த அளவிற்கு அவரது பாலோவர்ஸை கைக்குள் போட்டுள்ளார். தனது புது நண்பர்களுடன் இவர் செய்யும் அட்டகாசங்களுக்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டுள்ளது. மேலும் அது ரசிக்கும் படியாக தான் உள்ளது.

காவியாவும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். குட்டி நயன்தாரா என்பதற்கேற்ப தனது முகபாவனைகளையும் நயன்தாராவை மிஞ்சி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது தேவலோக மங்கை போல சூப்பரான ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here