இது அழகு ஓவியமா?? இல்லை காவியமா?? பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் பெயிண்ட்டிங் போட்டோஸ்!!

0

விஜய் டிவி பிரபலமான நடித்து காவியா தற்போது புதிய ஓவியமாக உருவெடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

காவியா

முல்லை கதாபாத்திரத்தில் குடும்பத்தில் இளைய மருமகளாக கலக்கி வருபவர் தான் காவியா. இவர் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். இடையில் சித்ரா மறைவுக்கு பின் இந்த வாய்ப்பு கிடைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்தார்.

குடும்பத்தை அனுசரித்து சென்று கணவருடன் மிகவும் அன்பாக இருக்கும் கதாபாத்திரம் தான் முல்லை. இதே போல நமக்கு மனைவி அமைய மாட்டாரா?? என ஏங்கும் அளவிற்கு சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வருகிறார் காவியா.

தன் கணவன் படித்து முன்னேற வேண்டும் என்ற குணமும் இவருக்கு அதிகம் இருப்பதால் தான் யாருக்கும் தெரியாமல் பல வேலைகளை செய்து வருகிறார். தற்போது கூட கதிருடன் சென்று அவரை பரீட்சை எல்லாம் எழுத வைத்தார்.

இதனால் தான் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அழகு ஓவியமாய் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here