சிலுசிலு காத்து.. மொட்டை மாடி…, ரசிகர்களை போட்டோஷூட்டால் திணறடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது மொட்டை மாடியில் போட்டோஷூட் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் காவியா. இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனால் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து எளிதில் பிரபலமானார். சின்னத்திரை நயன்தாரா என்றும் அனைவராலும் புகழப்படுபவரும் கூட. என்ன தான் இவர் சைடு ரோலில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனம் இவர் மேல் தான் இருந்தது.

அதன் மூலம் தான் காவியாவிற்கு முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் என்ன தான் எதிர்ப்புகள் இருந்தாலும் நாளடைவில் அதனை மாற்றி அமைத்து முல்லையாக வலம் வருகிறார்.

சித்ராவையே மறக்கும் அளவிற்கு நடிப்பில் கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது சீரியலையும் தாண்டி அவர் வெளியிடும் போட்டோஷூட் ரீல்ஸ் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தற்போது கூட மொட்டை மாடி போட்டோஷூட் செய்து ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here