தனது சொந்த தங்கையை அறிமுகப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – அப்படியே உங்களை உரிச்சு வச்சுருக்காங்களே!!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது தனது தங்கையை அறிமுகப்படுத்தியுள்ளார். இவருக்கு இப்படி ஒரு தங்கையா?? என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான காவியா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதைக்களத்தில் வீட்டின் சின்ன மருமகளாகவும், அதே சமயம் கணவருக்கு பிடித்த மனைவியாகவும் நடித்து வருகிறார்.

மீனா எவ்வளவு தான் சண்டை போட்டாலும் முல்லை இதுவரையிலும் யாரையும் எதிர்த்து பேசியதே கிடையாது. ஆனால் மீனாவிற்கு முல்லைக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே தான் இருக்கும். அதுவும் முல்லை சண்டை போடுவதற்கு முக்கிய காரணமே தன் கணவர் கதிரை பற்றி கேவலமாக பேசுவதால் தான்.

மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமே முல்லை தான். முல்லையை வைத்து தான் கதை நகர்ந்த கொண்டிருந்தது. தற்போது தனது அக்கா மல்லி வேறு வீட்டிற்கு வந்ததால் ஒரு பக்கம் சந்தோசத்தில் இருந்தாலும் மற்றொரு பக்கம் அவர் செய்த துரோகமும் மனதில் நிற்க எதோ கடமைக்கு பழகி கொண்டிருக்கிறார்.

தற்போது கூட தனத்துடன் மல்லி வீட்டிற்கு தான் சென்றுள்ளார். ஆனாலும் கதிரை பிரிய மனமில்லாமல் திணறி வருகிறார். இவ்வாறு தத்ரூபமான நடிப்பால் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் காவியா.

இத்தனை நாட்கள் யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதாவது அவரது சொந்த தங்கையை அறிமுகப்படுத்தியுள்ளார். அச்சு அசல் காவியாவை போலவே அவரது தங்கையும் உள்ளார். அந்த விடியோவை நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here