பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனை விசாரிக்கும் போலீஸ்… ஓ இதான் காரணமா??

0

விஜய் டிவியில்  நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் வீட்டின் கடைசி தம்பி கண்ணனாக நடித்து வருபவர் சரவண விக்ரம். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசொட் ப்ரோமா வீடியோ!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டு குடும்பத்தை மையமாக கொண்ட இந்த சீரியல் தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் பல திரைப்படங்களின் சாயலாக இருக்கிறது என பல விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல அந்த விமர்சனங்கள் அனைத்தும் அந்த சீரியலுக்கு நல்ல கமெண்டுகளாக மாறியது. இவ்வாறு ரசிகர்களுக்கு ஏற்ற கதை அமைப்பில் இன்று வரை ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த சீரியலின் தற்போதைய கதையாக, வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட  கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவால் குடும்பம் முழுவதும் சோகத்தில் இருக்கிறது. மேலும் இதனால் கண்ணனின் அம்மா லட்சுமி உடல் நலம் சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருக்கிறார். மேலும் இந்த விவரம் அறிந்து அங்கு செல்லும் கண்ணனை லட்சுமியை  பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தி  திட்டுகின்றனர் மூர்த்தி மற்றும் ஜீவா.

இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீரியல் எந்த அளவுக்கு பரபரப்பாக விறுவிறுப்பாக போனாலும், அதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மிக ஜாலியாக இருப்பார்கள். மேலும் போட்டோ எடுப்பது, ரீல்ஸ் செய்வது என தங்களின் பொழுதை கழிப்பர்.

அந்த வகையில் தற்போது கண்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் என்றென்றும் புன்னகை படத்தில் வரும் போலீஸ் காமெடிக்கு, கண்ணன், மல்லிகா மற்றும் பிரசாந்த் இணைந்து ரீல்ஸ்  செய்து அந்த வீடியோவை கண்ணன் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here