தன் பரம எதிரியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – தலைக்கு தில்ல பாத்தியா??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணவிக்ரம் தனது பரம எதிரி ஒருவரிடம் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணனை வைத்து தான் விறுவிறுப்பான கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது கண்ணன் ஐஸ்வர்யா இடையே காதல் அளவிற்கு செல்ல கண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறார்.

ஏனெனில் ஏற்கனவே கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு வீட்டில் பணத்தை திருடி தான் காலேஜ் ஃபீஸ் காட்டினார். இது முல்லைக்கு தெரிய வரவே அதனை கதிரிடம் சொல்லி பெரிய பிரச்சனையே ஆனது. அதிலிருந்து ஐஸ்வர்யாவிடம் இருந்து விலகி தான் உள்ளார் கண்ணன்.

இப்பொழுது மல்லியின் மகன் பிரஷாந்த் புதிதாக சீரியலில் நுழைய வந்த நாளில் இருந்து ஐஸ்வர்யா பின்னால் தான் சுற்றி கொண்டுள்ளார். ஐஸ்வர்யாவிற்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை தான். ஆனால் கண்ணனை கடுப்பேத்த ஐஸ்வர்யா அவருடன் நெருங்கி பழகுவது போல நடித்து கொண்டுள்ளார்.

ஆனால் கண்ணன் ஐஸ்வர்யா பிரசாந்தை நிஜமாகவே விரும்புகிறார் போல என நினைத்து கொண்டு தன்னை தானே கஷ்டப்படுத்தி கொண்டுள்ளார். கண்ணனுக்கு பிரசாந்தை பார்த்தால் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. இந்நிலையில் இருவரும் இணைந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here