பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் பேமிலி போட்டோஸ்!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக்குடும்ப கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்டதால் தான் இந்த சீரியல் டாப் ஹிட். எப்பொழுது இந்த மாதிரியான கதையம்சங்கள் வெள்ளித்திரையில் தான் பார்த்திருப்போம். முதன்முதலாக இதனை சின்னத்திரையில் பார்ப்பதால் தான் ரசிகர்களுக்கு பிடித்து போனது.

ஒரு அண்ணன் தன் தம்பிகளை தனி ஆளாக எப்படி கஷ்டப்பட்டு வளர்க்கிறார் என்பதையே முக்கிய கருவாக வைத்து இயக்கப்பட்டு வருகிறது. அதன் பின் 2 தம்பிகளுக்கு திருமணம் ஆன நிலையில் கண்ணன் ட்ராக் தான் தற்போது ஓடிக்கொண்டுள்ளது.

இன்னும் கல்லூரி வாழ்க்கையை கூட முடிக்காமல் இருக்கும் கண்ணனுக்கு ஐஸ்வர்யா மீது காதல் ஏற்பட தற்போது வீட்டில் ஒத்து கொள்வார்களா?? என்ற குழப்பத்துடன் கதை நகர்ந்துகொண்டுள்ளது. கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஜே சரவண விக்ரம்.

ஆரம்பத்தில் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்போது இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here