பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா தனது கேரியரை ஆரம்பித்தது இதில் தானா? அதுவும் குக் வித் கோமாளி பிரபலத்துடனா?

0

விஜய் டிவியில் வெவ்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாக  இருந்து வருபவர் மணிமேகலை. அதே போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற வெற்றி சீரியலில் ஜீவாவாக நடித்து வருபவர் வெங்கட். இவர்கள் இருவரும் இணைந்து சன் தொலைக்காட்சியின் ஒரு அங்கமான சன் மியூசிக்கில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளனர். அப்பொழுது உள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்து உள்ளது.

சன் டிவி குழுமத்தின் அங்கமாக இருக்கும் டிவி சேனல்கள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மணிமேகலை. 2009 ஆம் ஆண்டு விஜேவாக திரைக்கு வந்த இவர் அதன் பின்னர் பல டிவி ஷோக்களை தொகுத்து வழங்கி உள்ளார். அதாவது இவர் பிராங்கா சொல்லட்டா , ஃபிரீயா விடு, ஹாட் சீட், ஒ.மை.காட், பிளாக், வெட்டி பேச்சு மற்றும் கோலிவுட் டைரீஸ் உள்ளிட்ட பல சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

மேலும் இவர் சன் நெட்வொர்க்கில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு தொகுப்பாளினியாக இருந்த இவர் அதன் பின்னர் விஜய் டிவிக்குள் நுழைந்தார். அங்கும் பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அதே போல் அந்த டிவியின் மற்றொரு பிரபலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா என்ற வெங்கட் ரங்கநாதன், தனது  திரைப்பயணத்தை சன் மியூசிக் டிவியில் ஒரு தொகுப்பாளராக தொடங்கி உள்ளார்.

அதற்கு முன்பு கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதன் பின்னர் விஜய் டிவி, சன் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் நடித்து உள்ளார். அதாவது இவர் புகுந்த வீடு,தெய்வம் தந்த வீடு,மெல்ல திறந்தது கதவு போன்ற பல வெற்றி சீரியல்களின் நடித்து உள்ளார். மேலும் இவர் தற்போது ரோஜா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட டாப் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா மற்றும் மணிமேகலை இணைந்து சன் மியூசிக்கின் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் அங்கரிங் செய்யும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் வெளியாகிய இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here