பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கும், ஜீ தமிழ் நாயகனுக்கும் இப்படி ஒரு கனெக்சனா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

விஜய் டிவியில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனாவாக நடித்து வரும் நடிகை ஹேமா பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஹேமா:

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்த்த ஹேமா ராஜ்குமார் 22 வயதில் திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்து உள்ளார். 2015 ஆம் ஆண்டு நடிகர் விஷால் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் ஆறாது சினம் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு சின்ன திரைக்கு சென்று விட்டார்.

விஜய் டிவியில் வெளியான “ஆஃபீஸ்” சீரியலில் நடித்தார். விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் மக்களுக்கு பிடிக்காமல் போனாலும் தற்போது இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் இந்த சீரியலில் ஜீவா மீனா இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பொன்னூஞ்சல் சீரியலில் நடித்து உள்ளாராம். மேலும் விஜய் டிவியில் வெளியாகி ஹிட் அடித்த ஈரமான ரோஜாவே என்ற தொடரில் நடித்து ஷியாம் உடன் ஜோடியாக நடித்து உள்ளாராம். இந்த விஷயம் பல பேருக்கு தெரியாமல் உள்ளது. தற்போது இவர்கள் இருவரும் இந்த தொடரில் சேர்த்து நடித்த போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SUNTELEVISIONS (@suntv_fanzclub)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here