ஜூனியர் கண்ணனுடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மீனா செல்லமுத்து தற்போது கண்ணனின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை மீனா செல்லமுத்து

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான் டாப் ரேட்டிங்கில் ஓடி கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் நடிக்கும் அனைவரும் மிகவும் எதார்த்தமாக தங்களது நடிப்பினை வெளிப்படுத்தியதால் தான் இந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. இப்படியாக இருக்க, இந்த சீரியலில் முல்லைக்கு கஸ்தூரி அத்தையாக நடித்து வருபவர் தான், மீனா செல்லமுத்து. இவர் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ளாராம்.

ரிக்கி பாண்டிங்கின் ட்ரீம் டீம் அணி – ஒரே ஒரு இந்தியர் மட்டுமே தேர்வு!!

இவர் “பாக்கியலட்சுமி” சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். இவர் இது போல சீரியல்களில் நடிப்பதனை இவரது குடும்பத்தினர் தற்போது வரை எதிர்த்து வருகின்றனராம். ஆனால், தனது மகனிற்காக தான் இவர் சின்ன திரையில் நடித்து வருகிறாராம். இப்படியாக இருக்க இன்னும் சிறிது நாட்களில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பிளாஷ் பேக் காட்சிகள் வர இருக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் நடிக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது சிறு வயது கண்ணனாக நடிக்கும் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை மீனா செல்லமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன் கேப்ஷனாக “ஜூனியர் கண்ணன்” என்றும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here