ஒட்டுமொத்தமாக ரோட்டிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – அடக்கடவுளே, அப்பவும் இப்படி தானா??

0

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் நடுரோட்டில் கும்பலாக ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அனைவரும் மல்லி வீட்டிற்கு கெஸ்ட்டாக வந்துள்ளனர். அதாவது லாக்டவுன் காரணமாக இந்த சீரியலில் பலர் கலந்துகொள்ள முடியாததால் பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகள் அட்டகாசங்கள் தாங்க முடியாது. இதில் பாக்கியலட்சுமி நடிகர்களும் இணைய சீரியல் சூடுபிடிக்கிறதோ இல்லையோ?? ஆனால் சோசியல் மீடியாவில் இவர்களின் ரீல்ஸ் வீடியோ தான் டாப் ஹிட். லாக்டவுன் சமயத்தில் கூட சீரியல் நடிகைகளின் ரீல்ஸ் தான் வைரலானது.

மேலும் வெள்ளித்திரையை விட சின்னத்திரை தான் அதிக பிரபலமாகி வருகிறது. ஏனெனில் தியேட்டர் ஏதும் திறக்கப்படவும் இல்லை, படங்கள் அவ்வளவாக வெளியாகவும் இல்லை. இதனால் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதிலும் விஜய் டிவியை அடித்து கொள்ள ஆள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அனைத்தும் சேர்ந்து ரீல்ஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் அனைவர்க்கும் பிடித்ததே குடும்பத்தின் ஒற்றுமை தான். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்களின் இணைந்து செய்த இந்த ரீலிஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here