ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு குழந்தையுடன் நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் – அடி போலி என வர்ணித்த ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து வரும் சுஜிதா தற்போது ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சுஜிதா. முந்தானை முடிச்சு படத்தில் கை குழந்தையாக வந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரை கலக்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்தும் நடித்துள்ளார். வாலி படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்து பிரபலமானார். மலையாளத்திலும் பல முக்கிய நடிகர்களுக்கு தங்கையாக நடித்துள்ளார். இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவர்க்கும் பிடித்த நடிகையாகவும் மாறினார்.

அண்ணி என்று சொன்னாலே நியாபத்திற்கு வருவது தனம் தான். விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவில் கூட தனக்கு தமிழ்நாட்டில் அண்ணி என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டதாக சொல்லி இருந்தார்.

அந்த சீரியலில் தனது குடும்பத்திற்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் தனமாக இருந்ததால் தான் அவரை அனைவருக்குமே பிடித்து போனது. இன்ஸ்டாவில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் அவர் பல டான்ஸ், ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here