பாண்டியன் ஸ்டோர்ஸில் கடைசியாக கேக் கட் செய்து கொண்டாடிய நெல்லை சிவா – கண்கலங்க வைத்த புகைப்படம்!!

0
குணசித்திர நடிகர் நெல்லை சிவா மரணம் - சோகத்தில் திரையுலகம்!!!
குணசித்திர நடிகர் நெல்லை சிவா மரணம் - சோகத்தில் திரையுலகம்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் நெல்லை சிவா இறப்பு பலரையும் வேதனையாக்கிய நிலையில் தற்போது கடைசியாக கேக் கட் செய்து கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெல்லை சிவா

விஜய் டிவியில் மிக பேமஸாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு நேரங்களில் குடும்பங்கள் அனைவரையும் தொலைக்காட்சி முன்பு கட்டி வைத்து வருகிறது. அந்த அளவிற்கு இந்த சீரியல் குடும்ப பாசத்தை மிக அருமையாக வெளிப்படுத்தி வருகிறது. இந்த சீரியலில் மூர்த்திக்கு மாமாவாக நடித்திருப்பவர் தான் நெல்லை சிவா.

இவர் தொடக்க காலத்தில் சினிமாவில் நடித்து வந்தார். பின்பு சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் சின்னத்திரையில் கால் தடத்தை பதித்தார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவருக்கு மிக பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த சீரியலில் இவரது நடிப்பும், இவரது பிரமாண்ட சிரிப்பும் மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவரது இழப்பு யாராலும் நம்ப முடியாதவையாக இருந்தது. மேலும் இவரது உடல் அடக்கம் மற்றும் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நெல்லையில் நடைபெற்றது. இந்நிலையில் அவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் கேக் கட் செய்து கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here