‘பச்சை நிறமே..பச்சை நிறமே’ – வேற லெவல் அழகில் முன்னாள் “பாரதி கண்ணம்மா” பிரபலம்!!

0

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் மூலமாக தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நடிகை காவியா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான போட்டோஷூட் ஒன்று நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” பிரபலம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களின் மூலமாக தான் பல நடிகர் மற்றும் நடிகைகள் பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் கதாநாயகியின் தங்கையாக நடித்தவர் தான், காவியா.

எழில் கொஞ்சும் அழகில் “பிக் பாஸ்” லாஸ்லியா – வைரலாகும் புகைப்படம்!!

இவர் இந்த சீரியலின் மூலமாக அனைவர் மத்தியிலும் பிரபலமாக இருந்து வந்தார். இப்படியாக இருக்க, “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது முல்லை கதாபாத்திரத்தில் தற்போது காவியா நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் காவியாவை அந்த கதாபாத்திரத்தில் மக்கள் ஏற்று கொள்ளவில்லை. ஆனால், தற்போது காவியா தனக்கு என்று ஒரு ஸ்டைலில் நடிப்பதை பார்த்து அனைவரும் அவருக்கு ரசிகர்களாக மாறி வருகின்றனர். காவியா எப்போதுமே தனது சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நடித்திருந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோஷூட் சற்று வித்தியாசமாக இருக்கிறது என்றே கூறலாம். காரணம், எப்போதுமே காவியா டிரெடிஷனல் உடையில் தான் போட்டோஷூட் நடத்துவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், இந்த முறையில் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். பசுமையான பச்சை வண்ண பின்புலத்தில் இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here