அவளோ பெரிய ரௌடிய பார்த்தே நம்ம முல்லைக்கு பயம் வரலையாம்..,க்யூட்டான மிரட்டிலில் மிரளவைத்த காவியா!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவியா. பல அட்டகாசமான ரீல்ஸ் விடீயோக்களை செய்து அசத்தி வருகிறார்.

காவியா

பல ஷார்ட் பிலிம்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா அறிவுமணி. இவர் நடிப்பு திறனை பார்த்து தான் விஜய் டிவியில் வாய்ப்பு தேடி வந்தது. பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சைடு ரோலில் நடித்து பிரபலமானார். எப்பொழுது பார்த்தாலும் துறுதுறுவென நடிப்பால் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.

எப்பொழுதும் சௌந்தர்யாவை வம்பிழுத்துக்கொண்டு கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருக்கும் ஒரு முக்கிய ரோல் தான் அது. சித்ரா மறைவிற்கு பிறகு முல்லை வாய்ப்பு தேடி வந்தது. அதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு நடித்தார் காவியா.

தற்போது முல்லை என்றால் நினைவுக்கு வருவது காவியா தான். அதுதான் அவர் கஷ்டபட்டத்திற்கான முழு பலன். முல்லைக்கும் கதிருக்கும் ரொமான்ஸ் சீன் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும் ரீல்ஸ் செய்வதில் அதிக ஆர்வமுள்ள காவியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பல விடீயோக்களை வெளியிட்டு வந்தார். அதனால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தினசரி ஒரு விடியோவாவது போடவில்லை என்றால் காவியாவிற்கு தூக்கமே வராது போல. மேலும் இவருக்கு தான் இப்படி என்றால் அவரது ரசிகர்களுக்கு இவர் ஒரு நாள் வீடியோ போடவில்லை என்றால் அவங்களுக்கு துக்கம் வராமல் தவிப்பதாக புலம்பி வருகின்றனர். தற்போது விஜய் சேதுபதியின் பேமஸ் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here