தனது மகனுடன் முதன்முதலாக ரீல்ஸ் செய்து அசத்திய பாக்கியலட்சுமி நடிகை – வேற லெவல் தான்!!

0

விஜய் டிவியில் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா தற்போது தனது மகனுடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கம்பம் மீனா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து கொண்டிருப்பவர் தான் மீனா. இவரை மீனா என்று சொல்வதை விட கம்பத்து மீனா என்று சொன்னால் தான் அனைவர்க்கும் தெரியும். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் அண்ணியாக நடித்து வருகிறார்.

ஒரு பக்கம் வில்லியாக தெரிந்தாலும் மற்றொரு பக்கம் பாசமாகவும் இருந்து வருகிறார். அதே சமயம் பாக்கியலட்சுமி சீரியலில் வேலைக்கார பெண்ணாகவும் பாக்கியாவிற்கு அனைத்து விதத்திலும் சப்போர்ட்டாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடுக்காட்டில் 100 நாட்கள்.., தொகுத்து வழங்கும் சிம்பு! பிக் பாஸ்னு நெனச்சீங்களா??

இந்த இரண்டு சீரியல்களிலும் அனைவர்க்கும் பிடித்தது என்னவென்றால் அவரது பேச்சு தான். கிராமத்து ஸ்டைலில் பேசுவதும், மனதில் பட்டத்தை அப்படியே சொல்லி விடுவதும் தான் மக்களை ஈர்த்தது. மேலும் இந்த அளவிற்கு பெயரும் புகழும் பெற்று வருகிறார்.

இப்படி எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் மீனாவிற்கு பெரும் சோகமும் உள்ளது. அவர் கணவர் இறந்த பிறகு தனி ஆளாக குழந்தையை வளர்த்து வருகிறார். மீடியாவிற்கு செல்வதால் அவரை பலரும் தவறாக தான் பேசினார்களாம். ஆனாலும் எதையும் காதில் வாங்காமல் நடித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார்.

இந்நிலையில் தொடர்ந்து பல ரீல்ஸ் விடீயோக்களை வெளியிடுவதில் வழக்கமாக்கி வரும் மீனா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகனுடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here