தனிக்குடுத்தனம் போக பிளான் போடும் மீனா, வம்புக்கு இழுத்த ஐஸ்வர்யா – பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் முத்திய சண்டை!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வீட்டில் தொடர்நது சண்டை நடந்து கொண்டே உள்ளது. மேலும் கதிர் வீட்டை விட்டு வெளியேறியதால் குடும்பமே கஷ்டப்பட்டு வருகிறது. தனம் குழந்தையையும் பார்த்துக்கொண்டு கடையையும் பார்த்து கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் கதிரும், மூர்த்தியும் கோவிலில் பார்த்து கொள்ள அங்கு ஒரு சைலன்ட்டான பாச போராட்டமே நடக்கிறது.

கதிருக்கு பிரசாதம் இல்லை என்பதற்காக தன்னுடையதையே கொடுக்கிறார் மூர்த்தி. அடுத்ததாக கோவிலில் நடந்தவற்றை மீனா ஜீவாவிடம் சொல்கிறார். கதிரை இப்பொழுது வீட்டில் உள்ளவர்கள் ஏற்று கொண்டு விட்டனர். அதே போல நாமும் சென்றால் ஏற்று கொள்வார்கள் என்று சொல்கிறார் மீனா. இதனால் கடுப்பான ஜீவா கடுப்பாகி திட்டி விடுகிறார்.

அடுத்ததாக கண்ணன் வேலை விஷயமாக ரூ.50 ஆயிரம் கேட்டிருந்தார் ஐஸ்வர்யா. அந்த பணத்தை ஜீவாவிடம் கொடுத்து கட்ட சொல்கிறார். ஐஸ்வர்யா அதனை கண்ணனிடம் கொடுக்க சொல்கிறார். ஆனால் தனம், கண்ணன் சின்ன பையன் என்றும் ஜீவா நல்லா விசாரிச்சு கொடுக்கட்டும் என்றும் சொல்கிறார். இதனால் கோவமடையும் ஐஸ்வர்யா கண்ணனை தனியாக அழைத்து சண்டை போடுகிறார். அப்பொழுது மீனா அங்கு வர என்ன விஷயம் என்று கேட்கிறார்.

அதற்கு ஐஸ்வர்யா கண்ணனை நம்பாம ஜீவா மாமா கிட்ட காசு கொடுத்து விடுறாங்க என்று சொல்ல மீனாவிற்கு கோவம் வருகிறது. என் புருஷன் இருக்குற வேலையை விட்டுட்டு உங்களுக்காக போயிருக்காரு நீ என்னென்னா இப்படி பேசுற என்று சொல்கிறார். ஐஸ்வர்யாவும் விடாமல் சண்டை போடுகிறார். நான் மாமா உடம்புக்கு சரியானதும் வீட்டை விட்டு போயிடுவேன் என்று ஐஸ்வர்யா சொல்ல அதற்கு மீனா நீ என்ன ஜமீன் பரம்பரையா என்று கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா, நீங்க எதுக்கு இந்த வீட்ல இருக்கீங்க என்று கேட்க கோபமடைந்த மீனா கயலை தூக்கி கொண்டு வீட்டை விட்டே செல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here